குருப்பெயர்ச்சி 2026: திடீர் பணவரவு; புதிய பதவிகள் தேடி வரும்… மீன ராசிக்கு எப்படி? | 2026: k.p.vidhyatharan- guru peyarchi meenam Pisces Rasipalangal

Spread the love

உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன்-2 முதல், 5-ம் இடத்தில் அமரப்போகும் குருபகவான், இனி, பல்வேறு யோகங்களை அள்ளித் தரப் போகிறார். மனக்குழப்பங்கள், தாழ்வுமனப்பான்மை எல்லாம் நீங்கும்.

1. குடும்பப் பிரச்னைகள் பலவற்றுக்கும் இப்போது தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி, மகளின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரங்களை மீட்டெடுப்பீர்கள்.

2. பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு. உங்களின் செல்வாக்கு கூடும். சொத்துப் பிரச்னையில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை, இப்போது நிறைவேற்று வீர்கள்.

3. தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. தள்ளிப்போன திருமணம் நடக்கும். புது வாகனத்தில் வலம் வருவீர்கள். நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றியுண்டு. திடீர்ப் பணவரவு உண்டு; சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

4. குறிப்பாக உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், மன நிம்மதி உண்டு. பழைய பிரச்னைகள் தீரும். சொத்து வாங்குவீர்கள்.

5. லாப-விரயாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குரு பகவான் பயணம் செய்வதால், புதுத் தொழில் தொடங்குவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் உண்டு.

6. குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், புது உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். புதிய பதவிகள் தேடிவரும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் உண்டாகும்.

7. குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தைப் பார்ப்பதால், சேமிக்கும் அளவுக்குப் பொருள் வரவு உண்டு, அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தை வழிச் சொத்துகள் கைக்கு வரும்.

8. குருபகவான் உங்களின் லாபஸ்தானத்தைப் பார்ப்பதால், வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டா கும். புது முதலீடுகள் செய்வீர்கள். மனைவிக்கு விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்கிக் கொடுப்பீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

9. வியாபாரத்தில் பற்று – வரவு உயரும். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வது நல்லது. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர் கடையை விரிவுபடுத்துவீர்கள். கணினி, உணவு, இரும்பு, கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

10. உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடி வரும். மேலதிகாரியுடன் பனிப்போர் நீங்கும். வேலைச்சுமை குறையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சிலர் சொந்த ஊருக்கே மாற்றல் ஆவார்கள்.

11. கணினித் துறையினருக்கு, அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். சிலருக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் உண்டு. இந்த ராசியைச் சேர்ந்த கலைத்துறையினருக்கு, முத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய நிறுவனத்திலிருந்தும் வாய்ப்புகள் தேடி வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *