குரூப்-4 தேர்வு: 56% சரிந்த விண்ணப்பங்கள்; TNPSC நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்கிறார்களா இளைஞர்கள்? | Group 4 Exam: Applications Drop by 56% – Are Youngsters Losing Faith in TNPSC Administration?

Spread the love

கட்டணமாகப் பெறப்படும் பணத்திற்கு என்ன மதிப்பு?

நம்மிடம் பேசிய அவர், “லட்சக்கணக்கானோர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும்போது, கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் கால வரையறைக்குள்ளாகத் தேர்வு முடிந்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

தேர்வு நாள்களில் விடைத்தாள் வழங்கி தேர்வுகள் எழுதிய பிறகு, தேர்வு வாரியக் குழுவுக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டு, குறைகள் இல்லாமல் கேள்விகளையும் விடைகளையும் நம்பகத்தன்மையான ஆதாரங்களுடன் வழங்க வேண்டும்.

வேலை இல்லாதவர்கள் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களில் இருக்கும்போது, அவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாகப் பெறப்படும் பணத்திற்கு என்ன மதிப்பு? பல லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்க, வெறும் 1,000 அல்லது 5,000 இடங்கள் என்று சொல்லி பல லட்சம் மாணவர்களை விண்ணப்பிக்க வைக்கிறது டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு

பிரின்ஸ் கஜேந்திர பாபு

இதனால் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை குறைகிறது

5,000 இடங்களுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று சொல்வதே ஒரு நியாயமற்ற போக்கு. 9 லட்சம் பேரில் 5,000 பேருக்குத்தான் வேலை என்றால், மிச்சம் உள்ளவர்கள் யார்?

குறைந்தபட்சம் தேர்வை தொடர்ந்து நடத்தி, சரியான நபர்களைத் தேர்வு செய்து வேலை கொடுத்துவிட்டால் பரவாயில்லை. ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஒரு தேர்வு நடந்தால் கேள்விகளில் சிக்கல் என்று நீதிமன்றத்திற்குப் போகிறார்கள்; விடை சரியில்லை என்று நீதிமன்றம் போகிறார்கள்; இட ஒதுக்கீடு தேர்வில் நியாயம் கிடைக்கவில்லை என்று போகிறார்கள்.

இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடுவதும், வழக்குகள் முடிந்து நியமனம் நடப்பதுமாக வருடக் கணக்கில் ஆகிவிடுகிறது. இதனால் தேர்வாணையத்தின் மீதும், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் மீதும் இருக்கக்கூடிய நம்பிக்கை குறைந்துபோகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *