கடந்த நவம்பர் 3-ம் தேதி, அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற்றது. ஈரான் போரின் தாக்கத்தினால், அமெரிக்க மக்கள் ட்ரம்பின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மையைத் தந்துவிட்டார்கள். இதனால், ட்ரம்ப் கடும் அப்செட்.
நவம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு, ஈரான் போரைப் பெரிதாக முன்நகர்த்தவில்லை ட்ரம்ப். இதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆக, இதில் ட்ரம்பிற்குத் தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை.
தங்கம் விலைக்கு வந்தால், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டும் தங்கம் விலை குறையவில்லை. உலகம் எங்கிலுமே தங்கம் விலை குறைந்துதான் உள்ளது.
தங்கம் விலை என்பதோ மத்திய அரசிற்கோ, மாநில அரசிற்கோ கட்டுப்பட்டது இல்லை. இது சர்வதேச சந்தையைச் சார்ந்தது. இதனால், இதற்கான கிரெடிட்டை இங்கு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது.
தங்கம் விலை ஏன் குறைகிறது என்று பார்த்தால், உலக நாடுகளில் பணவீக்க அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை ஏற்றியுள்ளன. இன்னமும் ஏற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
தங்கம் என்பது வட்டி தராத முதலீடு. வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால், தங்கத்தைத் தாண்டி வட்டித் தரும் முதலீடுகள் பக்கம் முதலீட்டாளர்கள் சென்றுள்ளனர். இதனால்தான் தங்கம் விலை குறைந்தது.
ஆக, இது சந்தை சார்ந்த மாற்றமே தவிர, அரசுகள் சார்ந்த விலை மாற்றம் இல்லை இது.