15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சொந்த தொகுதியிலேயே வெற்றியைத் தரவில்லை மக்கள்.
ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையும் இழந்து வருகிறார் மம்தா பானர்ஜி.
தற்போது திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி அணி, ரிதப்ரதா பானர்ஜி அணி என இரு அணிகள் உருவாகியுள்ளன. 58 எம்.எல்.ஏக்கள், 20 மக்களவை உறுப்பினர்கள் மம்தாவை விட்டு பிரிந்துவிட்டனர்.
இதனால், மம்தாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

“என் சொந்த அலுவலகத்தில் இருந்துதான் நான் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கினேன். 1984-இல் நான் எம்.பி. ஆனதிலிருந்தும், அதற்கு முன்பே மாணவர் அரசியலில் இருந்தபோதும் இந்த அலுவலகத்தை நான் நடத்தியிருக்கிறேன்.
அன்று என்னால் முடிந்ததென்றால், இன்றும் என்னால் முடியும். இன்று நாம் சதியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். ஒரு நாள், எல்லாவற்றுக்கும் சான்றுகள் கிடைக்கும்.
துரோகிகளுக்காக நான் மக்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் சின்னத்தில் அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்தீர்கள். அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.