
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்திற்கான தகுதியான விவசாயிகளின் பட்டியல் e-PACCS ERP மென்பொருள் தரவுகள் மூலம் சங்கம் வாரியாக சரிபார்க்கப்படும்.
இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர், துறை அலுவலர் மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறை அலுவலர் அடங்கிய சிறப்புச் “சரிபார்ப்புக் குழு” அமைக்கப்படும். இக்குழுவினர் 21 நாட்களுக்குள் சரிபார்த்து பட்டியலைச் சமர்ப்பிப்பர்.
பின்னர், TNeGA (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) மூலம் இறுதிப் பகுப்பாய்வு செய்யப்பட்டு 45 நாட்களுக்குள் தள்ளுபடித் தொகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசால் முழுமையாக விடுவிக்கப்படும்.
கடன் தள்ளுபடி முழுமையாக நேர் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் பிணையாக வைத்த அசல் நில ஆவணங்கள் மற்றும் நகைகள் உடனடியாகத் திருப்பி அளிக்கப்படும்.
மேலும், கடன் நிலுவை ஏதுமில்லாத விவசாயிகள், வரவிருக்கும் சாகுபடிப் பருவத்திற்குப் புதிய பயிர்க்கடன்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி உடையவர்களாவர் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.