சபரீசன் என்ட்ரி; கேக் வெட்ட மறுத்த முதல்வர்; எம்.எல்.ஏ குழந்தைக்கு பெயர் சூட்டு விழா! – சட்டமன்ற ஹைலைட்ஸ்! | Sabarisan Arrives, Chief Minister Declines Cake-Cutting, MLA Celebrates Child’s Naming Ceremony”

Spread the love

அதிகாரிகள் முதல்வரின் தனிப்பிரிவில் அந்தக் கேக்கை வாங்கி வைத்தனர். ஆனால், முதல்வர் தரப்பு கேக் வெட்டும் ஐடியா இல்லை. மேலும் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டினால் சரியாகவும் இருக்காது எனக் கூறிவிட்டதால், அந்தக் கேக்கை அப்படியே மீண்டும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சட்டமன்ற அவை ஊழியர்களுக்கும் தலைமைச் செயலகத்தில் கூடியிருந்த தவெக நிர்வாகிகளுக்கும் ஸ்வீட் பாக்ஸ்கள் விநியோகிக்கப்பட்டது. ஊழியர்கள் ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கிவிட்டு முதல்வருக்கு அதிகாரிகளிடம் வாழ்த்துகளையும் கூறிவிட்டு சென்றனர்.

திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ பல்லவிக்குச் சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருந்தது. முதல்வர்தான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென பல்லவி கூறியிருந்தார். முதல்வரின் பிறந்தநாளான இன்றே அந்த வாய்ப்பும் வந்தது. சட்டமன்றம் முடிந்த பிறகு பல்லவியைக் காத்திருக்க சொன்ன அதிகாரிகள் முதல்வர் ஃப்ரீ ஆனவுடன் அழைத்தனர்.

பல்லவி ஏற்கனவே தமிழ் வெற்றிக்கொண்டான் என்ற பெயரைத் தேர்வு செய்து வைத்திருந்தார். அதை முதல்வரிடம் சொல்ல, முதல்வரும் குழந்தையின் காதில் மூன்று முறை பெயரைச் சொல்லி வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார்.

மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சில கூறுகளை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்யும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி அவையிலிருந்து வெளியேறினார்.

எடப்பாடி வெளியேறிய போதும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சங்கராபுரம் ராகேஷ் போன்றோர் அவையிலேயே இருந்தனர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *