கேட்டவரம் தரும் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடலாம் வாருங்கள்!

Spread the love

பெரும்பாலும் சிவாலயங்களில் ஈசன் கிழக்கு நோக்கியே அருள்பாலிப்பார். ஆனால் மேற்கு நோக்கு ஈசன் அமர்ந்திருக்கும் ஆலயங்களும் உண்டு. அவை மிகவும் விசேஷமானவை என்பார்கள்.

ஒரு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனம் என்பது ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவலிங்க தரிசனத்துக்கு ஒப்பானது என்பர். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான தலம் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் கோயில்.

சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் கண்டிகை தாண்டியதும் மேலக்கோட்டையூரில் உள்ளது ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம். தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஆலயத்தில் இறைவன் மேகநாதேஸ்வரராய் மிக அழகாக கம்பீரமாக சதுர ஆவுடையராக மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

சதுர ஆவுடை லிங்கம் என்றாலே அது மிக மிகப் பழைமையான ஆலயம் என்றும் சொல்வது உண்டு. மேலும் சதுர ஆவுடை ரிஷிகளால் ஸ்தாபிக்கப்படுவது என்ற ஐதிகமும் உண்டு. இங்கு வருணன், மேகநாதன் எனும் இந்திரஜித் ஆகியோர் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்தைச் செய்து பலன் பெற்றார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன.

அருள்மிகு மேகநாதேஸ்வரர்

இந்தத்தலத்தில் ராமாயண கால நிகழ்வு ஒன்று உண்டு என்கிறார்கள். சிவபக்தனான ராவணனின் மகன் இந்திரஜித் எனும் மேகநாதன், இங்கு வந்து நீண்ட ஆயுளைப் பெற மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்தைச் செய்தான் என்கிறார்கள். இதனால்தான் இந்த ஆலய ஈசனின் திருப்பெயர், ‘மேகநாதேஸ்வரர்’ என்றானது என்கிறார்கள்.

துர்வாசரின் வேள்வியைத் தடுக்கும்வண்ணம் வருணன், விளையாட்டாக மழை பொழிந்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், குளிர்ந்த தேகம் கொண்ட வர்ணனுக்குக் கடுமையான வெப்புநோய் வருமாறு சபித்தார். இதனால் உடலெங்கும் வெப்பம் பெருகிய வருணன், இந்த ஆலயத்துக்கு வந்து, அவனுடைய வாகனமான மகரம் எனும் முதலையைக் கொண்டு மகரத் தீர்த்தம் உருவாக்கி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து சாபவிமோசனமும் பெற்றான் என்கிறது தலபுராணம்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பொதுவாக திருக்கடையூரில் ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்தால் விசேஷம் என்பார்கள். அதற்கு இணையான பெருமையை உடைய இந்தத் தலத்தில் செய்வது மிகவும் சிறப்பு என்பது பக்தர்களின் கருத்து. ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாளில் இங்குவந்து ஆயுஸ்ஹோமம் செய்து இறைவனை வழிபட்டால் தீர்க்காயுள் கிட்டும் என்கிறார்கள்.

அம்பிகை இங்கே நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இவளை வழிபட மாங்கல்ய வரமும், பலமும் கிட்டும் என்கிறார்கள். சிவபெருமான் வாசுகி பாம்பின்மீது நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம் எனப்படும். அது இங்கே மட்டுமே காணப்படுவது இந்த ஆலய விசேஷம்.

விளக்குப் பூஜை

சீதளம், வெம்மை சம்பந்தமான நோய் கண்டவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கிப் பலன் பெற்று செல்கிறார்கள். கடுமையான தலைவலி, தலைப்பாரம் கொண்டவர்கள் இங்கு வந்து வழிபட நிவர்த்தி பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். நோய் தீர்க்கும் அற்புதத் தலமாக மேகநாதேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது.

இந்த அற்புத தலத்தில் தான் வரும் 16.10.26 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் திருவிளக்குப் பூஜை நடைபெறவுள்ளது. சக்தி விகடனும் மேகநாதேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நடத்த உள்ள இந்த விளக்கு பூஜையை ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனமும் சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து வழங்க இருக்கிறார்கள்.

பொதுவாகவே நவராத்திரி என்பது அன்னை ஆதி சக்தியை வழிபட உகந்த நாள்கள். அதிலும் நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தன. இந்த நாளில் அம்பிகையை தீப லட்சுமியாக விளக்கேற்றி வழிபட்டால் கேட்கும் வரம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

மேகாம்பிகையின் அருளால் சர்வ மங்கலங்களும் கிடைக்கும் என்பது உறுதி. நாம் மனதில் நினைத்து வேண்டிக்கொண்ட காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். நம்முடைய மனச் சங்கடங்கள் அனைத்தும் விலகும்; பெண்கள் பூஜையில் அமரலாம். உங்கள் பிள்ளைகளுக்காகவும் குடும்ப உறவுகள், சுற்றம் நட்புகள் நலம்பெற வேண்டிக் கொள்ளலாம்.

எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கவும், சொந்த வீடு அமைய, கல்யாண வரம் கைகூட, கடன் பிரச்னைகள் நீங்கிட, பிள்ளைப் பாக்கியம் கிடைக்க… என சகல பிரார்த்தனைகளை முன்வைத்து நடைபெறவுள்ளது இந்த விளக்குப் பூஜை.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

விளக்கு பூஜை

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்குப் பின் வேறு எந்த தகவலும் அனுபப்பட மாட்டாது என்பதால் முன்பதிவு செய்தாலே போதுமானது.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *