இன்று இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தி அறிவித்துள்ளது. இதையொட்டி தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதத்தில் இருந்து 5.50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தற்போதைய வட்டி விகித உயர்வுக்கு முக்கிய காரணங்கள் – மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை ஆகும்.

நம்முடைய தேவைகளுக்கு நாம் எப்படி வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறோமோ, அதே போல, வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கும்.
வாங்கிய கடனுக்கு நாம் வங்கிக்கு வட்டி கட்டுகிறோம் அல்லவா… அதேபோல, வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்குக் கட்டும் வட்டியின் பெயர் ரெப்போ வட்டி.
இப்போது ரெப்போ வட்டி விகிதம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்குக் கட்டும் வட்டி விகிதம் அதிகரிக்கும்.
இதனால், வங்கிகள் நாம் வாங்கிய கடன்களுக்கு வட்டி விகிதத்தை ஏற்றும்.
இதனால் தான், நமக்கும் ரெப்போ வட்டி விகித ஏற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.