கேமரா, நடிகர்கள் இல்லாமல் ஒரு படம் – மலையாள சினிமாவிலிருந்து முழுநீள ஏ.ஐ படம்! |A Movie Without Cameras or Actors—A Full-Length AI Film from Malayalam Cinema!

Spread the love

“வாக்தத்த பூமி’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படம், மலையாளச் சினிமாவின் முதல் ஏஐ திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.

சுயாதீனத் திரைப்பட இயக்குநர் சித்திக் பறவூர் கதை, திரைக்கதை எழுதி, அனிமேஷன் மற்றும் இயக்கப் பணிகளைக் கவனித்திருக்கிறார்.

Vagdatha Boomi - AI Movie

Vagdatha Boomi – AI Movie

இந்தப் படத்தின் ஒரு காட்சிக்குக்கூட கேமராவைப் பயன்படுத்தவில்லையாம். முழுக்க முழுக்கப் படத்தின் அத்தனை வேலைகளையும் ஏஐ மூலமாகவே செய்திருக்கிறார்கள்.

கூகுளின் விஇயோ 3 (Veo 3), ஹிக்ஸ்ஃபீல்ட் (Higgsfield), ஓபன்ஆர்ட் (OpenArt), சாட்ஜிபிடி (ChatGPT), கூகுளின் ஜெமினி (Gemini), லெவன்லேப்ஸ் (ElevenLabs) மற்றும் சீடன்ஸ் 2 (Seedance 2) போன்ற பல்வேறு ஏஐ தொழில்நுட்பங்கள் இப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதற்கு, ஏஐ குறிப்புகளுக்கு நிஜ மனிதர்களின் முகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 72 நிமிட நீளமுள்ள இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *