தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை|Experts Warn Over Rising Teenage Pregnancies and Child Marriage

Spread the love

இளம்வயது திருமணங்கள் நடைபெற காரணம்?

“முதல் காரணம் வறுமை. ஏழ்மையான குடும்பங்களில் மகளைப் பராமரிப்பது சுமையாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாவது கல்வியறிவின்மை. மக்களுக்கு குழந்தைத் திருமணம் பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லை.

மூன்றாவது சமூகப் பழக்கவழக்கங்கள். நான்காவது பாலின சமத்துவமின்மை. ஐந்தாவது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் மோசமான வீடியோக்கள், உறவுகள் இவற்றால் ஏற்படும் தாக்கத்தால் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.”

18 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்து கொள்வது சரியா?

21 வயதில்தான் ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாய்மை அடைந்து ஆரோக்கியமான குழந்தையைப் பாதுகாப்பாக பெற முடியும். 21 வயதில்தான் பெண்ணின் கருப்பை வளமை பெறுகிறது.

குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணம்
சித்திரிப்புப் படம்

இளம்வயது திருமணங்களால் ஏற்படும் விளைவுகள்?

1. ஊட்டச்சத்துக் குறைபாடு, பிரசவ காலச் சிக்கல்கள் போன்றவை தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.

2. கல்வி தடைபடுதலால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கல்கள்.

3. வீட்டு வன்முறை, பாலியல் கொடுமை, மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உண்டு

4. கல்வி, வேலை வாய்ப்பு, போதிய வருமானம் இல்லாததால் வறுமைக்கு ஆளாகுதல்.

5. காதல் திருமணங்களால் தாய் தந்தையை இழப்பது.

போன்றவை இளம் வயது திருமணங்களால் ஏற்படுகின்ற விளைவுகள்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *