மழை வேண்டியும் காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும் வேள்வி யாகம்; முக்கொம்பில் குவிந்த விவசாயிகள் | Farmers gather at Mukkombu for a ritual ceremony to Cauvery River

Spread the love

இந்நிகழ்வில், அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத் தலைவர் யோகநாதன் பேசுகையில்,

“காவிரி நதி தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவதால், அதன் நீர்வளத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் வளமாக வழங்குவது காலத்தின் கட்டாயம். காவிரி நீர்வரத்து தடையின்றி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். பருவமழை வளம் பெருக வேண்டும்.

ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்ப வேண்டும். விவசாய உற்பத்தி உயர வேண்டும். குடிநீர் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் சமநிலை நிலை நிறுத்தப்பட வேண்டும். உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழ வேண்டும்.

காவிரி ஆறு மற்றும் பிற நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது, மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது, ஏரிகள் மற்றும் குளங்களைப் பாதுகாக்க வேண்டும்.

நீர்வளப் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; சமூக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும்” என்றார்.

அதோடு, இந்த நிகழ்வில் பங்கேற்ற நதிநீர் சங்க நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வஸ்திர மரியாதை செய்து கௌரவித்ததுடன், பிரசாதம் வழங்கபட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *