கேரளம் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம்: முதல்வர் சதீசன் தொடங்கி வைத்தார். – Kumudam

Spread the love

கேரளாவில் தற்போதைய அரசியல், பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய இரண்டு கூட்டணிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சி ஆகிய இரு கட்சிகள் இடையே தான் போட்டி நிலவியது.

ஆனால் தற்போதைய நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு 10 முறை ஆட்சியை தக்கவைத்த கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியுற்றது. மொத்தம் உள்ள 140 இடங்களில் 99 இடங்களில்  வெற்றி பெற்று இந்திய காங்கிரஸ்கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் கேரளாவின் முதலமைச்சர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. ரமேஷ் சென்னிதலா, கே.சி. வேணுகோபால்,வி.டி. சதீசன் ஆகிய மூவரின் பெயரும் இடம்பெற்றது.

அதுமட்டுமின்றி கேரளா அரசியலில் கேசி வேணுகோபால், வி.டி சதீசனை விட அதிக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நீண்ட கலந்தாய்வுக்கு பிறகு கேரளாவின் முதலமைச்சராக மே 18 அன்று ஆளுநர் அர்லேக்கர் வி.டி.சதீசனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கேரள மாநில முதல்வராக பதவியேற்றவுடன் வி.டி.சதீசன் தலைமையிலான புதிய அரசு, பெண்களுக்கான ‘பிரியதர்ஷினி’ இலவச பேருந்துப் பயணம், ASHA மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு, மற்றும் முதியவர்களுக்கான புதிய நலத்துறை உருவாக்கம் போன்ற முக்கிய நலத்திட்டங்களை அறிவித்தார்.

முதல் நாளில் அறிவித்த ‘பிரியதர்ஷினி’ இலவச பேருந்து திட்டம், அனைத்து சாதாரண கே.எஸ்.ஆர்.டி.சி (KSRTC) பேருந்துகளிலும் மகளிருக்குமான இலவசப் பயணத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் ஜூன் 15 முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று அதிகாரபூர்வமாக முதலமைச்சர் வி.டி.சதீஷன் அமல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் 7 வகையாக அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *