கேரளாவுக்கு குறைந்த விலையில் மின்சாரம்; தவெக அரசுக்கு சாத்தியமில்லாமல் ஏன்?- ஸ்டாலின் கேள்வி | Kerala Gets Electricity at Lower Rates; Why Is It Not Possible for the TVK Government? – Stalin Questions

Spread the love

“கேரளாவுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?” என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கேரளத்தைப் பற்றிய செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.

த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை எனச் சர்ச்சையாகியுள்ளது.

ஸ்டாலின் பகிர்ந்த செய்தி

ஸ்டாலின் பகிர்ந்த செய்தி

அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?

இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.

மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *