“கேலி செய்வது கோழைத்தனம்!”- குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்| actress radhika slams bodyshame comments on kushboo daughters

Spread the love

அதேபோல சமீபத்தில் திருமணம் முடிந்த குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவும் உருவக்கேலியைச் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில் குஷ்புவின் மகள்களுக்கு ஆதரவாக நடிகை ராதிகா குரல் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பேச்சுரிமை என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமை அல்ல.

குஷ்பு மூத்த மகள் திருமண விழாவில்

குஷ்பு மூத்த மகள் திருமண விழாவில்

ஒரு பொது நபரின் மகள்களைக் கேலி செய்வது நகைச்சுவை ஆகாது. அது கோழைத்தனமான செயல். ஒருவரது தோற்றம் என்பது சாதனையும் அல்ல, தோல்வியும் அல்ல. அவரது குணாதிசயமே முக்கியமானது.

நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தரமற்ற செயல்களில் யார், எங்கு ஈடுபட்டாலும் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரு பெண்ணை விமர்சிக்கலாம், ஆனால் அவளுடைய குழந்தைகளைக் கேலி செய்வது நாகரிகம் அல்ல. அது ஒரு சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *