“முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்” – கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள் | “Power cut at former MLA’s house for a week” complaint was lodged to Collector

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக  2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான் ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது வீட்டில் கடந்த 15-ம் தேதி மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியத்திற்குப் புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜோசப் வீட்டில் மின் இணைப்பைச் சரிசெய்தனர்.

இதுபற்றி ஜான் ஜோசப் கூறுகையில், “எனது வீட்டில் கடந்த 15-ம் தேதியிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி கொல்லங்கோடு மின்சார வாரிய அலுவலகத்துக்கு நான் நேரில் சென்று அங்கிருக்கக்கூடிய புகார் புத்தகத்தில் புகாரைப் பதிவுசெய்தேன்.

அதுபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதால், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொபைல் ஆப்பில் புகார் செய்தேன், அதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் மின்னகம் சார்பாக புகார்கள் பெறுவதற்காக ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *