முதல்வர் விஜய் குறித்து தவறாகப் பேசியதற்காக நேற்று கைது செய்யப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று இரவே விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.
பிறகு சென்னைக்கு வந்தவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். திருச்சி விமான நிலையத்திலேயே தவெக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தவர், கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் இப்போது வெளியிட்டிருக்கிறார்.

அவர், “விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற சோஃபா மாடல் அரசு, பிரச்னைகளைத் திசைதிருப்புவதற்காக என்னைக் கைது செய்திருக்கிறது. தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப் பதிவு செய்து சென்னையிலிருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள். என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமெடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.