“கொறடாவை நியமிக்கும் உரிமை எடப்படிக்குதான் இருக்கிறது,அதனால்.!”- முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை | AIADMK Inclusion in Cabinet: VCK MP Urges Chief Minister

Spread the love

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது.

இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்யின் த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தத் தரப்புக்கு த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விசிக எம்.பி ரவிக்குமார் `மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

“சமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற 25 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட குழு, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இத்தகைய செயல் அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கத்திற்கு உள்ளாகுமா? என்பது ஒரு தீவிரமான அரசியலமைப்பு கேள்வியாகும்.

மேலும், இவர்களில் சிலரை அமைச்சர்களாக நியமிக்க மாண்புமிகு முதலமைச்சர் பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தகைய நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதும் ஒரு முக்கியமான விவகாரமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *