கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக்கிய சம்பவம் | BJP Leader Suvendu Adhikari’s Aide Shot Dead Near Kolkata

Spread the love

இது குறித்து கேள்விப்பட்டதும் சுவந்து அதிகாரியும் மற்ற பா.ஜ.க தலைவர்களும் உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். மருத்துவமனையில் சந்திரநாத் உயிரிழந்தார். அவர் கடந்த பல ஆண்டுகளாக சுவந்து அதிகாரிக்கு உதவியாளராக இருக்கிறார். சந்திரநாத்தான் சுவந்து அதிகாரியின் அரசியல் பணிகளை ஒருங்கிணைத்து வந்தார்.

இத்துப்பாக்கிச்சூட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுவந்து அதிகாரியின் சகோதரர் திப்யந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க நிர்வாகி நிகில் பிரசுன் கூறுகையில், “‘இந்தச் சம்பவம், இத்தனை ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் வளர்த்தெடுத்த, வன்முறை கலாசாரத்தின் ஒரு வெளிப்பாடாகும்.

அவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்தக் கொலைக்குப் பின்னால் ஒரு ஆழமான சதி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அப்பாவிகளைக் கொலை செய்கிறது,” என்று தெரிவித்தார்.

ஆனால் இத்தாக்குதலுக்கு பா.ஜ.கதான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தக் கொலையைக் கண்டித்ததுடன், பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோதிகள் கடந்த மூன்று நாட்களாக தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

மத்யகிராம் தொகுதியில் கடுமையான போட்டிக்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 2399 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கலவரத்தில் ஈடுபட்டதாக 80பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநிலத்தின் பல பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகங்கள் பா.ஜ.கவினரால் தாக்குதலுக்கு உள்ளாகின. திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *