தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.
குன்னம் தொகுதி
குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அ.தி.மு.க கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சியைச் சேர்ந்த சரண்யா, நா.த.க-வில் வழக்கறிஞர் கீர்த்திவாசன், த.வெ.க-வில் ரேவதி களத்தில் இருக்கிறார்கள்.
சிட்டிங் எம்.எல்.ஏ., எளிமையான அணுகுமுறை உள்ளிட்டவை எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ப்ளஸ். பாரிவேந்தர் களமிறங்கி, மாணவர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட வாக்குறுதிகளைத் தருவது, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிரான பிரசார வியூகம் ஆகியவை சரண்யாவுக்கு ப்ளஸ். அதேசமயம் புதுமுகம், கட்சிக் கட்டமைப்பு இல்லாமை சரண்யாவுக்கு மைனஸ். மற்ற இருவரும் கணிசமாக வாக்குகளைப் பிரிப்பார்கள். அ.தி.மு.க வேட்பாளர் நேரடியாகக் களம் காணாததால், தி.மு.க முந்துகிறது.