சட்டசபைக்கு ரீ எண்ட்ரிக்கு தயாராகும் ஸ்டாலின்? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி  – Kumudam

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இது திமுகவினர் மட்டுமில்லாது மற்ற கட்சியினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில், ஆளுநர் உரை மீதான பதிலுரையில்  முதல்வர் விஜய் பேசினார். அப்போது ஸ்டாலின் தோல்வி குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்து இருந்தார். 

இது திமுகவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் ஸ்டாலின் சட்டசபைக்கு ரீ எண்ட்ரி கொடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலினை போட்டியிட வைத்து, அங்கு ஓட்டுமொத்த திமுகவை இறக்கி வேலை செய்ய வைத்து வெற்றி பெற செய்ய வியூகம் வகுத்து வருகிறது. 

இந்நிலையில், புதுக்கோட்டையில் தி.மு.க., நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு பேசுகையில், ”சட்டசபையில் முதல்வர் விஜய், ‘அப்பாவை காணோம்’ என்கிறார்; வருவார், எவ்வளவு விரைவாக வர வேண்டுமோ, அவ்வளவு விரைவாக மீண்டும் சட்டசபைக்கு வருவார்; இது உறுதி,” என்றார்.

இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி என்பதையே, நேருவின் பேச்சு அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *