அதையடுத்து நான்கு முறை சமரசத் தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இன்று நீதிபதி லட்சுமிநாராயணன் முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருதரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருவதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் சுமுகத் தீர்வை எட்டிவிடும் என்றும் அமைச்சர் மரியவில்சனின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “சமரசம் செய்துகொள்ள முடியாத பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இப்படியான வழக்குகளைச் சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பலாம் என்ற உத்தரவுகள் இருந்தால், அதை இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள்”என்று அமைச்சர் மரியவில்சன் தரப்புக்கு உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைச்சர் மரிய வில்சனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.