சமரச டீலிங்; ‘கப்சிப்’ ஆன அதிரடி அமைச்சர் டு `ஜோசியருக்கே கட்டம் சரியில்லை’ | கழுகார் | Kazhugar updates on dmk mla and minister silent

Spread the love

தி.மு.க கட்சி ஆட்சியின்போது, பைசா துறைக்கு அமைச்சராக இருந்த கோல்டு பிரமுகர், சொந்த மாவட்ட அ.தி.மு.க மாஜியை சமீபத்தில் போனில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினாராம். ‘தி.மு.க-வுக்கு மாஜியை வரவேற்கவே சிக்னல் காட்டியிருக்கிறார் கோல்டு பிரமுகர்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதாவது, ‘மறுசீரமைப்புக்கு பின் மாவட்டத்திலிருக்கும் தி.மு.க சீனியருக்கு ஓய்வு கிடைக்கப் போகிறது.

அவரிடத்தை நிரப்புவதற்கு அ.தி.மு.க மாஜியை தி.மு.க-வுக்குள் இழுத்துவர திட்டமிடுகிறார் கோல்டு பிரமுகர். அதன் எதிரொலியாகத்தான், ‘ஸ்டாலின் கோபப்பட்டால் த.வெ.க ஆட்சியே அழிந்துவிடும்’ என்று பேசியிருக்கிறார் அ.தி.மு.க மாஜி… ‘ என்கிறார்கள் விவரப்புள்ளிகள். இதனிடையே, ‘சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி போன்றவர்கள் போய்விட்டால், எடப்பாடிக்கு நெருக்கமான இடத்தில் நீங்கள் இருக்கலாம்.. அவசரப்படாதீர்கள்’ என மாஜிக்கு அறிவுரைச் சொல்கிறார்களாம் உள்ளூர் அ.தி.மு.க புள்ளிகள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *