தூத்துக்குடி: "வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டுப் போட்டது அறியாமை" – அனிதா ராதாகிருஷ்ணன்

Spread the love

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பூத் வாரியாக திமுக மற்றும் தவெக பெற்ற வாக்குகளைப் பட்டியலிட்டு காட்டி பேசியிருக்கிறார்.

“வேட்பாளரே தெரியாமல் தவெகவுக்கு ஓட்டு போட்டிருக்கிறீர்களே, இது எவ்வளவு பெரிய அறியாமை. எவ்வளவு மாயை, எவ்வளவு மயக்கம். இந்த மக்களுக்காக எங்களுடைய தலைவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

அந்தத் தலைவரை களத்தில் மறந்துவிட்டீர்களே. எங்கள் தளபதியை மறந்துவிட்டீர்களே. எங்கள் எம்.பி கனிமொழியை மறந்து விட்டீர்களே. எனக்கு இந்தப் பூத்தில் 437 ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். ஆனால் தவெகவில் நின்றவருக்கு 406 ஓட்டு செலுத்தியிருக்கிறீர்கள்.

எங்கள் கட்சிகாரர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா? எதற்காக தவெகவிற்கு வாக்களித்தீர்கள். இப்படிப் பல்வேறு மாயைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இன்றைய முதல்வர் உங்களுக்கு என்றைக்காவது 1 ரூபாய் கொடுத்திருப்பாரா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எம்.ஜி.ஆர் தனது சொந்த பணத்தை அள்ளிக்கொடுத்தார். ஆனால் இன்று 1 ரூபாய் கூட கொடுக்காதவர் முதலமைச்சராகி இருக்கிறார். யோசித்து பாருங்கள். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனிமேலாவது எங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *