சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறிய நிலையில், இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், “சமாஜ்வாதி கட்சியில் விரைவில் ஒரு பெரிய பிளவு ஏற்படப் போகிறது. ராம் கோபால் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒரு கடிதத்தை அளித்துள்ளார்.
சுரங்க ஊழல் மற்றும் கோமதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்ட ஊழல் ஆகிவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். சட்ட நடவடிக்கைகள் இறுக்கமடைந்து வருவதால், சமாஜ்வாதி கட்சி பதற்றமடைந்துள்ளது.