சர்க்கரை இருப்புக்கு புதிய கட்டுப்பாடு; மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!|Sugar Stockpiling Gets a Cap: Why India Took This Step

Spread the love

சர்க்கரையைச் சேமித்து வைக்கப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பு – “உற்பத்தி, நுகர்வு அல்லது பயன்பாட்டிற்காக மாதத்திற்கு 10 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான சர்க்கரையைப் பயன்படுத்தும் எந்தவொரு மொத்த நுகர்வோரும் 15 நாள்களுக்குத் தேவையான அளவை விட அதிகமாகச் சர்க்கரையை இருப்பாக வைத்திருக்கக் கூடாது”.

இது வருகிற செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து நவம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் இந்தியாவில் அடுத்தடுத்துப் பண்டிகைகள் வர உள்ளன. இந்தக் காலத்தில் எப்போதுமே சர்க்கரைக்கான தேவை அதிகமாக இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு போர் சூழல், காலநிலை போன்ற காரணங்களால், சர்க்கரையின் விநியோகம் குறைந்திருக்கிறது… அதன் விலையும் அதிகமாகி இருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்யவே, இந்திய அரசு இப்படியான முடிவை எடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *