“சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயை பாதுகாக்கவே நான் இருந்தேன்!” – பாதுகாப்பாளர் பகிர்ந்த தகவல் |actor-ketan-karande-reveals-he-worked-as-aishwarya-rai-bodyguard-to-protect-her-from-salman-khan

Spread the love

அந்தப் பேட்டியில் அவர், “சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஐஸ்வர்யா ராயின் பாதுகாப்பாளராகப் பணியாற்றினேன். குறிப்பாக, சல்மான் கானிடமிருந்து அவரைப் பாதுகாப்பதற்காகவே நான் பணியில் அமர்த்தப்பட்டேன்.

ஒருவேளை இந்த விஷயம் சல்மான் கானுக்கும் தெரிந்திருக்கலாம். அப்போது ஐஸ்வர்யா “குச் நா கஹோ’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து, படப்பிடிப்புத் தளத்தில் விடுவதே என்னுடைய முக்கிய வேலையாக இருந்தது.

Salman Khan & Aishwarya Rai

Salman Khan & Aishwarya Rai

ஒருமுறை ஐஸ்வர்யா மேடத்தை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் காரில் ஏறிப் புறப்படத் தயாரானபோது, நேர் எதிரே சல்மான் கான் நின்று கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் காரை விட்டு இறங்கிச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால், டிரைவர் ‘நீங்கள் இறங்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, உடனடியாகக் காரை வேறு திசையில் திருப்பி வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *