சவரன் 80 ஆயிரம் வருமா? பாதாளத்தில் தங்கம் விலை.. அடகு வைத்தவர்களுக்கு வரப்போகும் நோட்டீஸ் | Will the price of a sovereign of gold drop to 80,000? trouble for those who have pledged gold

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: தங்கத்தின் விலை குறைவது ஒரு புறம் சந்தோஷமான விஷயம் என்றாலும், சாமானிய மக்கள் பலர் தங்கத்தை அடகு வைத்து தான் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வந்தனர். அவர்களுக்கு தங்கத்தின் மதிப்பு உயர்வது பெரிய வரமாகவே இருந்தது. ஆனால் விலை தொடர்ந்து சரிந்து 92 ஆயிரம் ஆக வந்திருப்பது தற்போது சாபமாக மாறி உள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று 92 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது.இப்படியே 80 ஆயிரம் வரை சரிந்து கொண்டே சென்றால், இன்னும் சில நாளில் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நோட்டீஸ் வரலாம். அதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.

ஒரு காலத்தில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரம் வரை போனது. ஆனால் படிப்படியாக குறைந்தாலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் என்கிற அளவிலேயேநிலைப்பெற்று இருந்தது. ஆனால் அண்மை காலத்தில் அமெரிக்காவில் நடந்த மாற்றம் உலக தங்க சந்தையின் கணக்குகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற, அமெரிக்கா பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதன் காரணமாக சட்டென தங்கத்தின் மீதான ஆர்வம் குறைய தொடங்கியது. ஆனாலும் வளைகுடாவில் போர்மேகங்கள் காரணமாக அப்படியே தங்கம் விலை சரியவில்லை. ஆனால் போர் மேகங்களும் மெல்ல மெல்ல மறைய தொடங்கியதால், டாலரின் மதிப்பு வலுவடைய தொடங்கியது.

Will the price of a sovereign of gold drop to 80 000 trouble for those who have pledged gold

தங்க இடிஎப் திட்டம்

இதனால் தங்கத்தின் முதலீடு செய்த பலர் வேகமாக முதலீடுகளை விற்று வெளியேற தொடங்கினார்கள். இதனால் தங்கம் விலை சரிந்தது. இந்த சூழலில் அண்மையில் நடந்த அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் குடியரசு கட்சிக்கும் , அதிபர் டிரம்புக்கும் சாதமாக இல்லை.. இது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி, தங்க இடிஎப் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் விற்க தொடங்கி உள்ளார்கள். அமெரிக்க டாலரில் அவர்கள் முதலீடு செய்து வருமானம் பார்க்கிறார்கள்.

85000 வர வாய்ப்பு

இந்த காரணங்களால் தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் வந்தது. இன்று ஒரு சவரன் தங்கம் 92 ஆயிரம் என்கிற அளவில் மோசமாக சரிந்துள்ளது. இன்னும் மோசமாக சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.85,000-க்கு வர வாய்ப்புள்ளதாக சில கணிப்புகள் கூறுகின்றன. இன்னும் சிலர் 80 ஆயிரம் வந்தாலும் வரலாம் என்று அச்சமூட்டுகிறார்கள். எனவே இப்படி கடுமையாக சரிவு வந்தால் ஒரு சவரனுக்கு 11 ஆயிரம் வரை கடன் கொடுத்த வங்கிகள் கண்டிப்பாக உங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளது.

வங்கிகள் கேட்க வாய்ப்பு

ஒருவர் வங்கியில் தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார் என்றால், வங்கி தங்கத்தின் மதிப்பைக் கணக்கிட்டு 85 சதவீதம் வரை தொகையைக் கடனாக வழங்குகிறது. இப்போது தங்கத்தின் சந்தை விலை கடுமையாகக் குறைந்துள்ளது. எனவே அடமானமாகப் பெற்ற தங்கத்தின் தற்போதைய மதிப்பும் குறையவே செய்யும். எனவே கடனுக்கான பாதுகாப்பு மதிப்பு குறைந்து வருவதால், வங்கி நிர்ணயித்த கடன் மதிப்பு விகிதம் மாற்றப்படும். அதேபோல் உங்களிடம் போட்ட கடன் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளைப் பொறுத்து கூடுதல் தொகை செலுத்துமாறு அல்லது கடனை ஒரு பகுதியாகச் செலுத்துமாறு வங்கிகள் கேட்க வாய்ப்பு உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *