நகை வாங்க போறீங்களா? இதுதான் உங்களுக்கு சரியான நேரம்…தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? – Kumudam

Spread the love

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!

கடந்த 2025-ம் ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த ஜனவரி 29-ம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

அதன்பிறகு விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. ஒரு சவரன் ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

11 நாட்களில் மளமளவென சரிவு!

இந்த நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக விலை குறைவு அதிகரித்துள்ளது.

கடந்த 17-ம் தேதி சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் வந்த தங்கம் விலை, 18-ம் தேதி ரூ.2,040 குறைந்து ரூ.98 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று (நவம்பர் 19) மேலும் ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

இந்தச் சூழலில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம் கடந்த 11 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.13,960 சரிந்துள்ளது.

வெள்ளி விலையும் குறைந்தது!

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களின் தங்கம் விலை (ஒரு சவரன்)

தேதி                                       விலை

19-11-2026     ஒரு சவரன்   ரூ.95,840
18-11-2026     ஒரு சவரன்   ரூ.97,720
17-11-2026     ஒரு சவரன்    ரூ.99,760
16-11-2026     ஒரு சவரன்    ரூ.1,00,320
15-11-2026     ஒரு சவரன்    ரூ.1,00,920

கடந்த 5 நாட்களின் வெள்ளி விலை (ஒரு கிராம்)

தேதி                                     விலை

19-11-2026     ஒரு கிராம்    ரூ.180
18-11-2026     ஒரு கிராம்    ரூ.185
17-11-2026     ஒரு கிராம்    ரூ.190
16-11-2026     ஒரு கிராம்    ரூ.190
15-11-2026     ஒரு கிராம்    ரூ.195

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *