சாத்தூர் : நடத்தையில் சந்தேகம்; கணவனின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது!

Spread the love

இன்று காலை மணியின் மரணம் குறித்துத் தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார்,   மணியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில், சண்டையின் போது தான் தள்ளிவிட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாகத் திவ்யபாரதி போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார், திவ்யபாரதியிடம் விசாரணை நடத்தினர்.

சாத்தூர் தாலுகா காவல் நிலையம்

சாத்தூர் தாலுகா காவல் நிலையம்

சண்டையின் போது மணியைக் கழிவறைக்குள் தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது தலை, தொடை மற்றும் மர்ம உறுப்பில் குத்தியதில், நீண்ட நேரம் ரத்தம் வெளியேறி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார்  திவ்யபாரதியைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *