இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறது.
ஜாகீர் கானுக்கு இதற்கு முன், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
தொடர்ந்து மூன்று சீசன்களாக சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிய நிலையில், வரவிருக்கும் 2027 ஐபிஎல் சீசனில் ஜாகீர் கானின் வருகை அணிக்குப் புதிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.