சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை! – புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை | Puducherry Traffic Police warns parents allow minors to ride bike will face 3 years prison

Spread the love

போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக 18 வயதுக்குக் குறைவான சிறார்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறையின் சீனியர் எஸ்.பி திவ்யா ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “‘புதுச்சேரியில் அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் உறுதிபூண்டிருக்கும் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை, 18 வயதுக்குட்பட்ட சிறார்களை மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் எனப் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

விபத்து | கோப்புப்படம்

விபத்து | கோப்புப்படம்

கடந்த 18.10.2026 அன்று வில்லியனூர் – கொம்பாக்கம் சாலையில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் சிறார் ஒருவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டியவர், அதில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர், ஒருமாதக் குழந்தை என அனைவரும் காயமடைந்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பாக, சிறார் வாகன ஓட்டுநர் மீதும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அவரது பெற்றோரில் ஒருவர் மீதும் கிழக்கு போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *