இப்படியான சூழலில் அவர்களுக்கு பெயில் கிடைச்சி வெளியே சென்று விடுவர். பின்னர் அவர்கள் வாழ்க்கையில் பலவேறு கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். இந்நிலையில், அடிதடி வழக்கில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த ஒரு மாணவர், பெயில் கிடைச்சி வெளியே சென்ற பிறகு மீண்டும் படிக்க ஆசைப்பட்டுள்ளார்.
குற்றத்தில் ஈடுப்பட்டவர் என்பதை காரணம் காட்டி அவருக்கான கதவுகள் அடைக்கப்படுகின்றன. இது மாவட்ட ஆட்சியர் ரேவதி கவனத்துக்குச் செல்ல உடனே அந்த மாணவரிடம் பேசி, இதற்கு முன்பு படித்த விவரங்களைக் கேட்டுள்ளார். அப்போது, அந்த மாணவர் ஐடிஐ படிச்சேன் டிஸ்கன்டினியூ செய்து விட்டனர் என்றுள்ளார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த மாணவனை மீண்டும் அவர் படித்த அதே ஐடிஐ-யில் சேர்த்து விட்டதுடன் படிப்புக்கான உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இதுபோல் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே சென்ற அனைவருக்கும் நல்வழி அமைச்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்சியர் செயல்படுத்தியதே புதிய பாதை திட்டம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் அதிகாரிகளை ஒருங்கிணைத்து இதனைச் செயல்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து கடந்த ஆறு மாதத்திற்குள் பெயிலில் வெளியே சென்றவர்கள் குறித்த டேட்டா போலீஸார் உதவியுடன் எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், குடும்பப் பின்னணி குறித்தெல்லாம் அறிந்து கொண்டோம். மொத்தம் 74 குழந்தைகள் குறித்த விபரம் பெறப்பட்டது. இதில் 41 குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் வர வச்சி பேசினோம்.