சிவகங்கை மாவட்டம், கீழக்கோட்டை ஆதினமிளகி ஐயனார் கோயில் : கவலைகள் தீரும்… உணவுப் பஞ்சம் ஏற்படாது! | Arulmigu Shri Keelakottai Ayyanar Temple

Spread the love

தமிழகமெங்கும் ஐயனார் கோயில்கள் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். ஐயன், ஐயனார், சாஸ்தா என்றெல்லாம் கொண்டாடப்படும் இவர் பூரணா புஷ்கலா என்னும் தன் தேவியருடன் காட்சி தரும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

தர்மத்தின் வடிவமாகக் கருதப்படும் இந்தச் சாஸ்தாவை வழிபட்டால் சகலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்டும். குறிப்பாக திருமணப்பேறு, குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பார் ஐயனார்.

அப்படி ஒரு தலம்தான் சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து கல்லல் மார்க்கமாக சிவகங்கை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆதினமிளகி ஐயனார் கோயிலின் வளைவு வரை செல்கின்றன. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

ஆதினமிளகி ஐயனார் கோயில்

ஆதினமிளகி ஐயனார் கோயில்

இங்கு இரண்டு சேமக்குதிரைகளின் நடுவில் பூரணா மற்றும் புஷ்கலா தேவியருடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஆதினமிளகி ஐயனார். இந்த ஐயனார் குறித்துத் தலவரலாறு சொல்லும் தகவல் சுவாரஸ்யமானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *