சீனாவின் அணு ஆயுத விரிவாக்கம்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா?|Satellite Images Reveal Major Expansion of China’s Nuclear Sites

Spread the love

ஈரானிடம் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்க அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த வேளையில், சீனா சத்தமே இல்லாமல் அணு ஆயுதக் கட்டமைப்பில் முக்கியமான வேலையை செய்து வருகிறது.

உலக அளவில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

அதனால், எல்லா விதத்திலும் ஒரு நாடு இன்னொரு நாட்டை விட, “சிறந்ததாக’ இருக்க வேண்டும் என்று முனைப்புடனும் இருக்கிறது… அதற்கான செயல்களையும் செய்து வருகிறது.

அதில் ஒரு பகுதி தான் சீனாவின் தற்போதைய செயல்பாடு.

சீனாவின் கட்டமைப்பு

சீனாவின் கட்டமைப்பு
Reuters

தங்களிடம் இருக்கும் வசதி மூலம் இப்போதே சீனா தனது அணு ஆயுதத்தை அமெரிக்காவின் எந்த நகரத்தின் மீது வேண்டுமானாலும் ஏவலாம்.

இந்த வசதியைத் தற்போது இன்னும் விரிவாக்கி வருகிறது சீனா என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவலின் படி, சீனா தங்களது மிக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளைக் கொண்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அணு ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில், பெய்ஜிங் ஏவுதளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் தகவல் தொடர்பு முனைகள் அடங்கிய ஒரு பரந்த வலையமைப்பை உருவாக்கி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *