சுற்றுச்சுவர் இல்லா பள்ளி: கோயில் திருவிழாவுக்கு இடையூறா? – பாதுகாப்பின்றி கல்வி கற்கும் குழந்தைகள்!

Spread the love

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண் 74-க்கு உட்பட்ட பனைமரத்தூரில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்பப் பள்ளியில், எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 47 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், பள்ளியில் பல அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன.

பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை, உணவறை மற்றும் வகுப்பறை என மொத்தம் மூன்று அறைகள் மட்டுமே உள்ளன. அதே இடங்களிலேயே கல்வி நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் இணைப்பாட செயல்பாடுகள், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த போதுமான இடவசதி இல்லாததும் பள்ளி நிர்வாகத்துக்கு சவாலாக உள்ளது.

இந்தப் பள்ளி பிரதான சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், சுற்றுச்சுவர் இல்லாத நிலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கேள்விக்குறியாக்கியுள்ளது. காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தும் போது அதிக வெயில் மாணவர்களை பாதிப்பதாகவும், பாதுகாப்பான விளையாட்டு இடம் இல்லாததால் குழந்தைகள் சுதந்திரமாக விளையாட முடியாத நிலையும் காணப்படுகிறது.

இந்தப் பிரச்னையின் பின்னணியில் கிராமத்தின் மத மற்றும் பாரம்பர்ய அம்சங்களும் உள்ளன. பள்ளி மைதானம் அமைந்துள்ள பகுதி, ஊர் பொதுக் கோயிலின் சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும் இடமாக இருந்து வருவதால், அங்கு நிரந்தர சுற்றுச்சுவர் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *