டெல்லி போராட்டம் காரணமாக ஒருவேளை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினாலும், அல்லது அங்கிருக்கும் போராட்டம் தணிந்தாலும் தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்புப் போராட்டம் ஓயாது என்றே கருதுகிறேன். ஏனெனில், ஒரு அமைச்சர் மாறினாலும் அதே பா.ஜ.க அரசு அல்லது அதே என்.டி.ஏ (NTA) முகமைதான் தேர்வை நடத்தப்போகிறது. பயிற்சி மையங்களின் ஆதிக்கமும் தொடரவே செய்யும். எனவே, அமைச்சர் ராஜினாமா என்பதுடன் பிரச்னை முடிந்துவிடாது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போராட்டத்தின் இறுதி இலக்கு என்பது நீட் தேர்வை முழுமையாகப் ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை மட்டுமல்ல, NTA அமைப்பையே கலைக்க வேண்டும். இதற்காக அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து Ban NEET கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவதே தமிழ்நாட்டின், குறிப்பாக மாணவர்களின் தெளிவான நிலைப்பாடு.” என உறுதியான குரலில் தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக திமுக-வைச் சேர்ந்த மருத்துவர் யாழினியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தொடர்பான போராட்டம் என்பது நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் (Ban NEET) என்பதற்காக அல்லாமல், தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் (Accountability) என்பதற்காக நடத்தப்படுகிறது. மாறாக, தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கை `நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்’ என்பதே.