"சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெகிழும் மகள்கள்

Spread the love

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘ஜெயிலர்’.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா

முதல் பாகத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகிடையே படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் ‘FDFS’-யை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினிகாந்தை வாழ்த்தி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” நீங்கள் எப்போதும் சூப்பர் டூப்பர் ஸ்டாராகத் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் மீண்டும் இந்த மகிழ்ச்சியையும் அன்பையும் வழங்கத் தேவையான பலத்தை அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் உங்களுக்காக நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டிருக்ககும் பதிவில், ” உலகிற்கு அவர் தலைவர்… தன் நடை, உடை, பாவனை மற்றும் ஈடு இணையற்ற திரைப் ஆளுமையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஆள்பவர். ஆனால் சௌந்தர்யாவிற்கு, அவர் வெறும் ‘அப்பா’ மட்டுமே…

 ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் – சௌந்தர்யா ரஜினிகாந்த்

இந்த அழகான தந்தை-மகள் பந்தத்தைப் பார்க்கும்போது தலைவர் மீதுள்ள மதிப்பு இன்னும் கூடுகிறது. அந்தப் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்; அவருடைய மிகச்சிறந்த கதாபாத்திரம் திரையில் நடித்தது அல்ல, தன் மகளின் வாழ்க்கையில் வாழ்வதுதான்!

உலகிற்கே சூப்பர் ஸ்டார், ஆனால் தன் மகளுக்கு அவர்தான் முதல் ஹீரோ! அவர் எத்தனையோ சாதனைகளை முறியடிக்கலாம், எத்தனையோ இதயங்களை ஆளலாம், ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான இந்த அன்பை விட விலையுயர்ந்தது எதுவுமில்லை” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *