நீங்க TVK-ஆ? குடிமகன் Rocked.. கலெக்டர் Shocked..! – Kumudam

Spread the love

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ’உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமிற்கு’ மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஒரு நாள் முழுவதும் கடையநல்லூர் நகரத்தில் குடியிருந்து ஒவ்வொரு பகுதிகளுக்காக சென்று ஆய்வை மேற்கொண்டார். தொடர்ந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு அசுத்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென ஒப்பந்ததாருக்கு உத்தவிட்டார். 

அப்போது அங்கு வந்த ஒருவர் போதையில் மாவட்ட ஆட்சித் தலைவரை பார்த்து, “ஐந்து ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. நீங்கள் tvk கட்சி நிர்வாகி தானே” என மாவட்ட ஆட்சியரை பார்த்து கேள்வி கேட்டார். மேலும், நான் பப்ளிக் உங்களிடம் கேட்பேன் என கூறினார்.  குடிமகனின் இந்த கேள்விகளை பார்த்து மாவட்ட ஆட்சியர் என்ன செய்வது  என்று கூட தெரியாமல் நிற்க, சிறிதி நேரம் அந்த இடமே பரபரப்பாக இருந்தது.
 
அதனைத் தொடர்ந்து, அங்கே உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு சென்று பேருந்து நிலையத்தை முழுமையாக முறையில் சைக்கிள் நிறுத்தும் பகுதியாக ஏன் மாற்றினீர்கள்? உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சைக்கிள் ஸ்டாண்ட் பயன்படுத்த வேண்டும், பஸ் நிலையம் முழுவதையும் சைக்கிள் நிலையமாக மாற்றக்கூடாது என்று அதிகாரிகளை அழைத்து எச்சரிக்கை செய்தார் மாவட்ட ஆட்சியர் .

அங்கே உள்ள பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆரோ வாட்டர் பிளானை பார்வையிட்டு உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் தொடர்ந்து திடீரென சார்பதிவு அலுவலகத்தில் நுழைந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கே சென்று பின்னர், பத்திரப்பதிவு ஆவணங்களை சரிபார்த்த அவர், ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் பத்திர பதிவுகள் குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பார்வையிடச் சென்றார். இப்படி நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *