சூர்யகுமார் யாதவ் கட்டிக்காத்த ரெக்கார்டு.. ஒரே தொடரில் பறிகொடுத்த இந்திய அணி.. இது சரியா ஸ்ரேயாஸ்! | Shreyas Iyer: India lost a T20 Series by 2-0 against Ireland after the 16 unbeatable T20 Series wins

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியிடம் டி20 தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடக்கமே மோசமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் டக் அவுட்டாகி நடையை கட்டினர்.

Shreyas Iyer

தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இஷான் கிஷன் 12 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் திலக் வர்மா நிதானமாக விளையாட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இலக்கு எட்டிப்பிடிக்க கூட சூழலில் இருந்த போது சிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்கே, திலக் வர்மா ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடைசி நேரத்தில் ஹர்சித் ராணா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு அருகில் வந்தார். ஆனால் 2 பந்துகளில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட போது, அவரும் விக்கெட்டாகினார். கடைசி பந்தை எதிர்கொண்ட பிரின்ஸ் யாதவ் சிக்ஸ் அடிக்க, இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியை 2-0 என்று வீழ்த்தி முதல்முறையாக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது அயர்லாந்து அணி.

கடைசியாக இந்திய அணி விளையாடிய 16 டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வி அடைந்ததே இல்லை. இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் அந்த அளவிற்கு தீவிரமாக ஆடினார். ஆனால் இந்திய டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டி20 தொடரையே ஸ்ரேயாஸ் ஐயர் இழந்துள்ளார். அதுவும் கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணியிடம் டி20 உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி வீழ்ந்துள்ளது.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்று தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றன. இதனை ஸ்ரேயாஸ் ஐயரும் உணர்ந்தே இருப்பார் என்பதாகவும் பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *