சூர்யா FANS ASSEMBLE…..‘சீன்’ பட ஆடியோ லாஞ்ச் வந்தாச்சு! – Kumudam

Spread the love

மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ‘ஆவேசம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன், ‘சீன்’ படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்ரியா நசீம் கதாநாயகியாகவும், நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் நகைச்சுவை அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘சீன்’ இசை… சுஷின் ஷ்யாம் கூட்டணி!

‘சீன்’ படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இவரது இசையில் ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக, இசை வெளியீட்டு விழா துபையில் உள்ள சிலிக்கான் சென்ட்ரல் மாலில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சென்னையில் விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6-ல் வெளியாகும் ‘சீன்’!

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், 2 மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடும் நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘சீன்’ திரைப்படம் மற்றொரு பெரிய படத்துடன் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால், படத்தின் புரமோஷன் பணிகளைப் படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது. சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் ஆகியோரின் கூட்டணியும், ஜித்து மாதவனின் இயக்கமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழு என்ன தகவல்களை வெளியிடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

https://x.com/ZhagaramOffl/status/2115700170046460236

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *