செக்கானூரணி காவல் நிலைய மரணம்: “முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பார்?”- கனிமொழி | Kanimozhi slams cm vijay in Chekkanurani police station lockup death issue

Spread the love

மதுரை வாலாந்தூரில் லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), நவம்பர் 14-ம் தேதி அதிகாலை காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார்.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை கூறினாலும், போலீஸார் அடித்துக் கொன்றதாகக் குற்றம்சாட்டி உறவினர்கள் 4 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

நேற்று முன்தினம் மதுரை சென்ற திமுக எம்.பி கனிமொழி, ஒட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், ” மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நவம்பர் 4ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *