செங்கடலில் ஹூதி முற்றுகை: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்|After Iran, Red Sea Crisis: Is Another Oil Shock Coming?

Spread the love

இதன் காரணமாக கூட, ஹூதி தற்போது இந்த முற்றுகையைக் கையிலெடுத்திருக்கலாம் என்றும், தற்போதைய முற்றுகைக்கு இன்னும் இரண்டு காரணங்களை எடுத்து வைக்கிறார்கள் நிபுணர்கள்.

ஒன்று, சவுதி அரேபியாவிடம் இருந்து தற்போது ஹூதி அமைப்பு ஏதேனும் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

மற்றொன்று, ஹூதி அமைப்பு மற்றொரு போருக்கு மீண்டும் தயாராகி வருகிறது என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

ஜூலை 20-ம் தேதி ஹூதி சவுதிக்கு எதிரான கப்பல் முற்றுகையை அறிவித்தது.

ஹூதி தாக்குதல்

ஹூதி தாக்குதல்

அடுத்த மூன்று நாள்களில் (ஜூலை 23), செங்கடல் வழியாக பயணம் செய்த சவுதி அரேபியாவின் இரண்டு டேங்கர்களை தாக்கியது ஹூதி.

இதற்குப் பதிலடியாக, ஹூதியின் ராணுவ மையங்கள், தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது சவுதி அரேபியா. இதற்கும் சவுதி அராம்கோ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி தந்திருக்கிறது ஹூதி.

இந்தத் தாக்குதல்கள் அடுத்தடுத்து தொடர்ந்தால், உலக எண்ணெய் பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பெரிய அடி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *