செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்! | Karur Anti-Corruption Bureau raids home of Senthil Balaji’s close associate

Spread the love

தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ஏ.வ.வேலு தொடர்புடைய சென்னை வீடு உள்ளிட்ட 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரரும், கரூர் மாவட்டத்தின் முக்கிய புள்ளியாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சங்கர் ஆனந்த் வீட்டில் இன்று காலை 8 மணி அளவில், இரண்டு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் ஒப்பந்ததாரர் கார்த்தி வீட்டிலும், பள்ளப்பட்டியில் உள்ள ரஃபீக் என்பவர் வீட்டிலும் என கரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *