Conspiracy hatched in a hotel with lover before killing fiancé: Lover pushed him off upon receiving the signal. | வருங்கால கணவனை கொலை செய்யும்முன்பு காதலனுடன் ஹோட்டலில் சதி

Spread the love

பாஸ்போர்ட் கிழிப்பு

தம்பதியினர் இருவரும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை எடுப்பதற்காக இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் விமான நிலையத்திற்கு சென்றபோது கேதனின் பாஸ்போர்ட்டை காணவில்லை. இதனால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம் கேதனின் பாஸ்போர்ட்டை ஷியா திருடி அதனை கிழித்துப்போட்டுள்ளார். தம்பதி பாலி தீவுக்கு செல்வதை சேதன் விரும்பவில்லை. எனவேதான் ஷியா இது போன்று செய்ததாக ஷியா விசாரணையில் தெரிவித்துள்ளார்.

238 மணி நேரம் போனில் பேசிய காதல் ஜோடி

ஷியா மற்றும் சேதனின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்தபோது நிச்சயதார்த்தம் நடந்த போதிலும் சுமார் எட்டு மாதங்களாக இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டுள்ளனர். ஜனவரி 1 மற்றும் ஜூன் 18 வரை அவர்கள் 2,000 முறை மொத்தம் 238 மணிநேரம் போனில் பேசியிருக்கின்றனர். ஷியா கட்டாயப்படுத்தி கேதனை கொலை நடந்த இடத்திற்கு அழைத்து சென்றதாக கேதனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்”என்றார்.

ரெஸ்டாரண்ட்டில் கடைசி நேர சதி

`சேதனிடம் ஏன் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்திருக்கலாமே’ என்று போலீஸார் கேட்டதற்கு, அத்திட்டத்திற்கு ஷியா ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அப்படி ஓடுவது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் ஷியா தெரிவித்தார். எனவேதான் கொலை செய்யும் முடிவை தேர்வு செய்ததாக சேதன் விசாரணையில் தெரிவித்துள்ளான். அதோடு கொலை நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சேதனை ஷியா கஃபே ஒன்றில் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கொலையை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இருவரும் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பிறந்தநாளை கொண்டாட 5ஸ்டார் ஹோட்டலில் 70 அறை

கேதனின் தந்தை விஷால் தனது வருங்கால மருமகள் ஷியாவின் பிறந்தநாளை கொண்டா பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் 70 அறைகளை முன்பதிவு செய்து வைத்திருந்தார். மலைநகரமான மகாபலேஷ்வரில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த ஏற்பாடுகளை ரத்துசெய்ய சொல்லிவிட்டு கேதனை புனே மலைப்பகுதிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று ஷியா கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *