‘சென்னையிலிருந்து முறையான பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் அவதிப்பட்ட மக்கள்!’ |Midnight Chaos as Inadequate Bus Services from Chennai Leave Passengers Stranded – Here’s What Happened”

Spread the love

பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து விளக்கம் கேட்க போக்குவரத்து துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிருவின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டோம், அழைப்பை ஏற்கவில்லை. அதிகாரிகள் சிலரிடம் விசாரிக்கையில், “பேருந்துகள் போதுமான அளவுக்கு விடப்பட்டிருந்தாலும், நகரம் முழுவதும் அதிகமான போக்குவரத்து நெரிசல் நிலவியதால் உரிய நேரத்தில் பேருந்துகளால் பேருந்து நிலையத்தை எட்ட முடியவில்லை.

உதாரணத்துக்கு திருச்சி, கும்பகோணம் போன்ற பகுதிகளிலிருந்து வண்டலூரில் யூடர்ன் அடித்து கிளாம்பாக்கம் வந்து சேர வேண்டிய பேருந்துகளை தாம்பரம் வரைக்கும் திருப்பி விட்டு யூடர்ன் அடித்து கிளாம்பாக்கம் வர வைத்தார்கள். ஆனால், தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் வந்து சேரவே 5-6 மணி நேரங்கள் தாமதமானது. அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதுதான் பிரச்னை’ என்கின்றனர்.

100% வாக்குப்பதிவை எட்ட வேண்டுமென விளம்பரம் மேல் விளம்பரமாக செய்து கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், உரிய அதிகாரிகளுடன் முறையாக திட்டமிட்டு பயணிகளுக்கு முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *