பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொள்ளாத அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மன்றத்திற்கு வந்துள்ளார். அது, மன்ற வளாத்தில் நடைபெறும் ஒரு தனியார் நிகழ்வு என்ற வகையில் அவர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன் மன்றத்திற்குத் தெரியாமல் நடத்தப்பட்ட மரம் நடும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம், கலந்துகொள்ளக் கூடாது என்று முடிவெடுக்க வேண்டிய உரிமை அனைவருக்கும் உள்ளது. அதன்பொருட்டு யாரையும், யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால், சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் எந்த வித முன்னறிவிப்புமின்றி, நிர்வாகிகளின் ஒப்புதலின்றி, திடீரென்று சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்று நடும் நிகழ்வில் அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பங்கேற்றது வருத்தமளிக்கிறது. இதை அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
கொள்ளையடித்து, குடித்து, கும்மாளமடிக்கும் இடமாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீண்டும் மாற்றவதற்காகத் துடித்துக்கொண்டிருக்கும் நயவஞ்சக கும்பலும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருபவர்களும் ஒன்று சேர்ந்து திட்டமிட்ட நாடகத்தில், அறிந்தோ அறியாமலோ அமைச்சர் திரு.ராஜ்மோகன் சிக்கிக்கொண்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.