சர்ச்சைகளின் நாயகன் போரிஸ் ஜான்சன்:
லிஸ் ட்ரஸ் முன்பு பிரதமராக இருந்தவர் போரிஸ் ஜான்சன். கலைந்த தலைமுடியுடன் வலம் வந்த அவர், “பிரெக்ஸிட்டை (பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது) முடித்துவிடுவேன்” என்று கூறி, அதனைச் செய்தும் காட்டினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரிட்டனின் மருத்துவக் கொள்கைகளை வழிநடத்தினார். ஆனால், நாடு முழுவதும் கடுமையான கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விதிகளை மீறி விருந்துகளை நடத்திய ‘பார்ட்டிகேட்’ (Partygate) சர்ச்சை அவரது பதவியைப் பறித்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த அவரது ஆட்சி அவதி அவதியாக முடிவுக்கு வந்தது.

பிரெக்ஸிட் புதிரில் சிக்கிய தெரசா மே மற்றும் கேமரூன்:
போரிஸ் ஜான்சனுக்கு முன்பு பிரதமராக இருந்த தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். ஆனால், அவர் கொண்டு வந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்ததால், அவமானத்துடன் அவர் பதவி விலக நேர்ந்தது. இத்தனை பதவி இழப்புக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் டேவிட் கேமரூன். தனது கட்சியின் ஒற்றுமைக்காக 2016-ல் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை நடத்திய அவர், மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்ததும், அதிர்ச்சியடைந்து ‘நான் கிளம்புகிறேன்’ என்று கூறி பதவி விலகினார்.
ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கேமரூன் தொடங்கி, தற்போது இரண்டாண்டுக்குள்பதவியை இழந்துள்ள ஸ்டார்மர் வரை பிரிட்டன் அரசியல் ஒரு நிலையற்ற தன்மையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாகப் பொறுப்பேற்கும் ஆண்டி பர்ன்ஹாம் இந்த வரிசைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!