சென்னை மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்… 1000 ஆண்டுப் பழைமை… திருமணத் தடை நீங்கும் | mylapore mundakanni amman temple

Spread the love

அந்தப் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், நாகம் கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் நம்புகிறார்கள் பக்தர்கள். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர். அம்மை, கண் தொடர்பான நோய்கள் ஆகியன தீரவும் இந்த அம்மனை வழிபடலாம் என்பது மேலும் சிறப்பு. தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி வரம், மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என அனைத்தையும் அருள்பவள் இந்த அம்மன்.

மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்

மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில்

நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு நாகக்கன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள்.

அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஆடிமாதம் முண்டகக் கண்ணியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பு. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை முண்டகக் கண்ணி அம்மனை தரிசித்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *