தாம்பரம் பள்ளிக்காரணை துணை கமிஷனர் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை என சுட்டிக்காட்டியிருந்தோம் அல்லவா… உடனடியாக அந்தப் பதவிக்கு ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த ஈஸ்வரனை நியமித்துவிட்டார்கள்.
இவர், அ.தி.மு.க எம்.பி ஒருவரின் உறவினராம். இருந்தபோதிலும் ஈஸ்வரனின் மீது நம்பிக்கை வைத்து உளவுத்துறை உயரதிகாரி அவருக்கு அங்கு போஸ்டிங் போட க்ரீன் சிக்னல் கொடுத்தாராம். பள்ளிக்காரணையில் துணை கமிஷனராக இருந்த ரகுபதியை கரூருக்கு மாற்றியிருக்கிறார்கள்.
கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் ரகுபதியை அங்கு நியமித்திருக்கிறார்களாம். ஹரி கிரண் பிரசாத்தை ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-யாக நியமித்திருக்கிறார்கள். ஏற்கெனவே சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி இடமாறதலுக்குள்ளாகும் ஹரி கிரண் பிரசாத்துக்கு மீண்டும் மீண்டும் பவர்ஃபுல் பதவிகள் கொடுக்கப்படுவதன் பின்னணியில் த.வெ.க பவர்சென்டர் லாபி இருப்பதால் உளவுத்துறையும் அமைதியாக இருக்கிறதாம்.