சேலம்: குடிநீர் முதல் மருத்துவம் வரை; அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் ஜருகுமலை மேலூர் – கீழூர் மக்கள் \ Melur-Keezhur Villagers Demand Basic Amenities: From Drinking Water to Healthcare

Spread the love

சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள்… ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக் கிராமங்கள்!

சேலம் மாவட்டம், ஜருகுமலையில் அமைந்துள்ள மேலூர், கீழூர் ஆகிய மலைக் கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் இன்று பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். குடிநீர், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெருவிளக்கு, அத்தியாவசியப் பொருள்கள், விவசாய விளைபொருள்களின் விற்பனை என அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் போராடி வருகின்றனர்.

ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு கிலோமீட்டர் நடை

மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,

“எங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி மிகவும் குறைவாக உள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்து தண்ணீரை வீட்டுக்குக் கொண்டு வர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தலையில் சுமந்தே வர வேண்டியிருக்கிறது.

கிராமத்தில் ஒரு பொதுக் கிணறும் உள்ளது. அங்கும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் மோட்டார் வசதி இல்லாததால் அந்தக் கிணறு பயன்பாட்டில் இல்லை. இதனால், தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடந்து சென்று குடிநீரை எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால், அந்த நேரத்திலேயே சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கோடைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது” என்றனர்.

எரியாத தெருவிளக்குகள்… இரவில் அச்சத்தில் மக்கள்!

இது குறித்து ராஜாமணி கூறுகையில்,

“கிராமத்தில் தெருவிளக்குகள் பல இடங்களில் செயல்படாமல் உள்ளன. பழுதடைந்த தெருவிளக்குகள் நீண்ட நாள்களாகச் சரிசெய்யப்படாததால், இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடனும் சிரமத்துடனும் நடமாட வேண்டிய நிலை உள்ளது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *